Saturday, September 20, 2014

"கலைஞர் 91" பரிசளிப்பு விழா

    பரிசளிப்பு விழா நிகழ்வில் எவ்வளவோ பேசவேண்டும் என நினைத்தேன். முதலில் கடைசியாகத் தான் நீ பேச வேண்டியிருக்கும் தம்பி என்று அண்ணன் வைரமுத்து சொல்லியிருந்தார். பின் திடீரென பரிசைப் பெற்றவுடனேயே பேசச் சொல்லிவிட்டார்கள். உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன், பேச இயலவில்லை.

நான் ஒலிவாங்கிக்கு முன்னால் பேச நின்ற அந்த நொடியில், காலையிலே கைலியோடு வேலைக்கு வந்து, கடைவேலை முடித்துவிட்டு, ஓணரிடம் கெஞ்சி விடுப்பு வாங்கி, மாலையிலே பரிசும் பாராட்டும் பெறுகின்ற போது, காலையில் நான் என்ன நிலையில் இருந்தேன், மாலையில் பாராட்டும் பரிசும் பெறுகிறேனே என உள் மனதில் ஓடியது, ஒலிவாங்கியைக் கையிலே பிடித்த போது.

நான் பார்த்து பயந்த முதல் கருப்புச் சட்டைக்காரர் அய்யா வரதாஜன், என் ஆருயிர் அண்ணன் டான் அசோக் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய பல்கலை ராஜேந்திரன் அவர்கள், தலைமைக்கழக பேச்சாளர் மதிப்பிற்குரிய போடி.காமராஜ், மதுரை கே.வி.ஆர், என் ஆருயிர் அண்ணன்கள் வைரமுத்து, தம்பி பிரபு, ஆசைத்தம்பி, அமர்நாத்,மல்லி செல்வகுமார், சரவணபெருமாள், முத்துகணேஷ் ஆகிய அத்துனைபேரையும் முதலில் வணங்கி வரவேற்க நினைத்திருந்தேன்.

கடைசியில் நான் இவ்வளவு தூரம் எழுதுவதற்குக் காரணமான அத்துனை முகநூல் நண்பர்களுக்கும், என்னை மென்மேலும் ஊக்கப்மடுத்திக் கொண்டிருக்கும் இணையத்தில் உள்ள கழகத்தின் மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி சொல்ல நினைத்திருந்தேன்.

நம்முடைய ஒப்புயர்வற்ற தலைவர் கலைஞரைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் பேச வேண்டும் என எண்ணியிருந்தேன்.

கடைசியில் ஓரிரு வார்த்தைகளிலேயே கண்களில் கண்ணீர் ததும்ப பேச முடியாமல் தவித்துப் போனேன்.

கடைசியில் பரிசினை மதிப்பிற்குரிய சின்னக்குத்தூசி டான் அசோக் அவர்களை சின்னக்குத்தூசி பட்டம் பெறுகின்ற அளவிற்கு திறமையுள்ள மகனாய் வளர்த்தெடுத்த, அவருடைய தந்தை மதிப்பிற்குரிய பல்கலை.இராஜேந்திரன் அவர்களிடம் இருந்து பரிசினைப் பெற்ற போது, சின்னக் குத்தூசி எல்லாம் வேண்டாம், சின்ன ஊசியாகவாவது ஆகிவிடுவோமா என்ற எண்ணம் தோன்றியது.

மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்!!

மீண்டும் ஒருமுறை இணையதள தி.மு.க வினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதுவரினும்
கலைஞரின் தொண்டன் என்பதில் சிறிதும் அடிபிறழாமல் கழகக் கொடி பிடித்து கம்பீரமாய் இணையத்தில் இனி வலம்வருவேன்!!:-)

No comments:

Post a Comment