Wednesday, January 28, 2015

விவசாயம் பற்றிய நீயா நானா

வெகுவாரங்களுக்குப் பின் கடந்த வாரம் விஜய் டி.வி யின் நீயான நானா மிக நல்லதொரு விவாத நிகழ்ச்சியாக, இந்த நாட்டிற்கு அத்தியாவசியத் தேவையான அமைந்த விவாதத்தின் கருப்பொருள் என்னை மிகவும் ஈர்த்தது.

நிகழ்ச்சியில் விவாசாயத்தை புத்தகத்தில் படித்து விட்டு தெனாவெட்டாக பேசிய பத்ரி சேஷாத்ரிக்கு, நிலத்தில் இறங்கி விவசாயம் செய்கின்ற விவசாயிகளோடு சேர்ந்து, செந்தமிழனும் செந்தமிழனுக்கு இருபுறமும் அமர்ந்திருந்தவர்களும் சேஷாத்ரியை சாட்டையால் அடித்தது போல் பதில் அளித்துக் கொண்டிருந்ததை பார்த்துப் பார்த்து அளவளாவினேன்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து வரக்கூடிய காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு வேண்டுமானால், தீங்கில்லாமல் போய்விடலாம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட வீரிய ரக விதைகளைப் பயிரிடும் நிலங்கள் இருக்கிறேதே, அவைகள் மரபணு விதைகளைத் தவிர மற்ற விதைகள் அந்த நிலத்தில் இனி அவ்வளவு சிறப்பாக இருக்காது என்கின்ற நிலையைக் கொண்டு வந்து விடுகின்றன. அதன் மூலம் இனி அந்த நிலங்களில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தவிர வேறெவற்றையும் பயன்படுத்தினால் எடுபடாது என்கின்ற நிலைக்கு விவசாய நிலங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் பண்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் இனி வரக் கூடிய காலங்கள் அனைத்திற்கும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்கின்ற இக்கட்டான சூழ்நிலைக்கு கார்ப்பரேட் விதைக் கம்பெனிகளால் விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன விலை சொல்கின்றதோ அந்த விலைக்குத் தான் வாங்க வேண்டும் என்ற நிலை வருகின்ற போது, விவசாயி கடனாளி ஆகி பெரும் பாதிப்பிற்குள்ளாகிறான்.

இத்தோடு முடீந்து விடுகிறதா யென்ன?இன்னொன்றையுன் சொல்கிறேன்.

எதையெதையெல்லாம் சாப்பிடகே கூடாது என்றொரு கேள்வி அந்த நிகழ்ச்சியிலே முன் வைக்கப்பட்டது. என்னைக் கேட்டால் சொல்லியிருப்பேன். தயவு செய்து தமிழ்நாட்டில் விளைகின்ற காய்கறிகளில் மிக முக்கியமாக மாம்பழத்தைத் தொட்டுக் கூட பார்த்து விடாதீர்கள் என்பது என்னுடைய விருப்பமாக இருக்கும். நான் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக உர முகவாண்மை ஒன்றிலே பணிபுரிந்து வருகிறேன். நான் என்றைக்கு அங்கு வேலைக்குச் சேர்ந்தேனோ அடுத்த சில மாதங்களில் மாம்பழப் பிரியரான நான், மாம்பழம் தின்பதையே விட்டு விட்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்.

மாம்பழ விவசாயம் பற்றிய விவரங்களை நீங்களும் தெரிந்து கொண்டால், மாம்பழம் சாப்பிடுவதை நீங்களும் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டுமா என்று யோசிப்பீர்கள்.

கார்த்திகை மாதங்களில் பூக்கத் தொடங்கும் மாமரங்களில் கிட்டதட்ட லட்சக்கணக்கான ரூபாய்க்கு ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு, பூக்கள் உதிர்ந்து விடாமல் பாதுகாப்பது, பூக்களை அதிகப்படுத்துவது என தொடங்கி மாம்பிஞ்சுகளே வருவதற்குள் மட்டுமே அதிக ரசாயனக் கொல்லிகளும் தெளிக்கப்படுகின்றன. பிஞ்சு காயாகிமழப் பறிக்கப்பட்டு வீடுதான் வந்து சேர்ந்து விட்டதே, இனியாவது மருந்தடிக்காமல் இருப்பார்கள் என்றா நினைத்தீர்கள் நிச்சயமாக இல்லை . காய்கள் பழமாவதற்கும் ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்பட்டதற்குப் பின் தான், அவை வியாபாரத்திற்கு வருகின்றன.

இந்த மாம்பழங்களைத் திண்பதற்கு தினம் ஒவ்வொரு சொட்டாக டைமெத்தோயேட் மருந்தையே குடித்து விடலாம். இப்போது நீங்களே மாம்பழத்தைத் திண்பதா இல்லை அதற்குப் பதில் தினம் ஒரு சொட்டு பூச்சிக் கொல்லி மருந்தைக் குடிப்பதாஙென்றுஙநீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் எத்தனையோ காய்கறிகள் இதை விடவும் அதிகப்படியான ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்ட பின் தான் பளபளப்பாக்காப்படுகின்றன என்பது மட்டும் நூறு சதவிகித உண்மை.

அந்நிகழ்ச்சியிலே இயற்கை விவசாயத்தை ஆதரித்துப் பேசியவர்களைக் கண்ட போது, அட, இப்படியும் விவாசாயிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்போலும் என்று ஆச்சரியப்படுகின்றளவிற்குத் தான் இன்று இயற்கை முறையில் செய்யப்படும் விவசாயத்தின் நிலை இருக்கிறது.

விவசாயம் என்பது பணம் ஈட்டுவதற்கான ஒரு வழி என்கின்ற புதிய மனநிலையில் இருந்து விவசாயிகள் மாறாத வரை ரசாயனக் கொல்லிகளை எவராலும் தடுத்து விடவும் முடியாது. அதைச் சாப்பிட்டு உயிர்வாழும் நம் ஆயுளை எவராலும் அதிகப்படுத்தியும் விட முடியாது.

No comments:

Post a Comment