Sunday, December 22, 2013

S.S.Sivasankar MLA

என் அன்பிற்கினிய அண்ணன் வழக்கறிஞர் வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்களின் திருமண விழா அது.

முதல்நாள் இரவிலே அண்ணன்கள், ஒப்பிலா மணி, சிவானந்தம், ரா.அசோக், கிருஷ்ணகிரி சாய்குமார், சபரிகிரி, டான் அசோக், வைரமுத்து, தம்பி பிரபு, இளஞ்செழியன் ஆகியோரெல்லாம் மண்டபத்திற்கு வந்து விட்டார்கள்.

எல்லோரையும் சாப்பிட வைத்துவிட்டு அவர்களை தங்குமிடத்திற்கு அனுப்பினோம். நானும் வி.பி.ஆர்.கதிர் அண்ணனும் சாப்பாட்டு அறையிலே நின்று கொண்டு சாப்பிட வருவோரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். சிவானந்தம் அண்ணனும் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
 
திடீரென சாப்பாட்டு அறைக்குள் ஒரு முனுமுனுப்பு.
என்ன என விசாரித்தால் அந்தா உக்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காரே அவர் ஒரு எம்.எல்.ஏ என்றார்கள். எனக்கு யாரெனத்தெரியவில்லை.

சிவானந்தம் அண்ணனிடம் போய் அண்ணே யாருனு அந்த எம் எல் ஏ என்று கேட்டபோது,
எஸ்.எஸ்.சிவசங்கர் எம் எல் ஏ டா தம்பி நம்ம பேஸ்புக்ல கூட இருக்காரே,கொஞ்சம் இரு சாப்பிட்டு நானே அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று அழைத்துச் சென்றார்.

  எல்லோரோடும் சமபந்தியிலே மிக எளிமையான தோற்றத்தோடு உறவினர்களோடு உறவினர்களாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிவானந்தம் அண்ணன் என்னை அழைத்துச் சென்று, அண்ணே வணக்கம் இந்த தம்பி தான் சீதாராமன் என்றார், நானும் மனம் நெகிழ  வணக்கம் அண்ணா என்றேன்.

அவர் சற்றும் யோசிக்காமல் "கருப்பு சிவப்பு துண்டு போட்ட ஒரு புரபைபோல் போட்டோ இருக்குமே அந்த பையன் தானா" என்றார்.

அசந்து போனேன். கடைக்கோடி முனையில் இருக்கும் ஓர் எளிய தொண்டனை இவ்வளவு உன்னிப்பாக கவனித்திருக்கிறாரே என்று.

பின் அவர் சாப்பிட்டு முடித்துவிட்டு காரிலே ஏறும் போது அண்ணா நம்முடைய இணையதள தி.மு.க நண்பர்களெல்லாம் வந்திருக்கிறார்கள் அவர்களை சந்திக்க நீங்கள் நாளை கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும் அண்ணா என்று கூறினேன்.
அதேபோல் மறுநாள் காலை தளபதியார் வந்து திருமணத்தை நடத்தி முடித்து விட்டுச் சென்ற பின் எங்களோடு வெகுநேரம் இருந்து எங்கள் அனைவரையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

நாங்கள் எல்லாம் வியந்தோம். ஒரு மாவட்ட செயலாளர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வளவு எளிமையாக எந்தவித படைபரிணாமங்களும் இல்லாமல் தன்னந்தனியாக செல்கிறாரே என்று எங்களுக்குள் பேசி வியந்தோம்.

அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கலைஞருக்கும், கழகத்திற்கும்.  கலைஞரின் கடைக்கோடித் தொண்டர்களுக்கும், அரியலூர் மாவட்ட உடன்பிறப்புக்களுக்கும், குன்னம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் கிடைத்த நன்முத்து.

இன்று உங்கள் புகழைக் கண்டு கொந்தளித்து உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க நினைக்கின்றனர். அவர்கள் இன்று சட்டமன்ற உறுப்பினராகவும் மாவட்ட செயலாளராகவும் இருக்கும் நீங்கள் அடுத்த கட்டத்தை அடையும் போது அவர்கள் உங்கள் காலடியில் நிச்சயம் வந்து விழுவார்கள். அப்போது அவர்களை இனம் கண்டு,வஞ்சித்து விடாமல், எதிரியை மட்டுமல்ல துரோகியையும் மன்னிக்கும் மாண்பு கொண்டவன் உண்மையான தி.மு.க காரன் என்பதை உணர்த்தி, இவரையா நாம் இப்படிப் பேசிவிட்டோம் என்று  எண்ணி அவர்கள் தனக்குத் தானே கொல்லி வைத்துக் கொள்ளும் நிலையும் நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.

கலைஞரும் கழகமும் கலைஞரின் கடைக்கோடித் தொண்டனும் உங்கள் பின்னால் இருக்கிறார்கள்.
சலசலப்பிற்கு அஞ்சாமல் "பனங்காட்டு நரி" யாய்
வெற்றி நடைபோட்டு வாருங்கள்.

அண்ணனுக்கு இந்த எளிய தொண்டனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

No comments:

Post a Comment